முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு 14 வரை வர்த்தக நிலையங்கள் பூட்டு

120

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் நாள் வரை 4 நாட்களுக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய  வர்த்தக நிலையங்களையும்,மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் அறிவித்துள்ளார்.

“ தைப்பொங்கலை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் அதிகளவு மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது.

இதனடிப்படையில் இன்று  தொடக்கம், எதிர்வரும் வியாழக்கிழமை வரை மருந்தகங்கள், பலசரக்கு வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை, உணவகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *