மட்டக்களப்பு நகர் மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பால் இறந்த 79 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்தப் பகுதி முடக்கப்பட்டு வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 10 காவல்துறையினர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது.