BREAKING NEWS

மண்டைத்தீவு படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழப்பு!

910

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்யமுற்பட்ட போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *