மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாமல் தவிர்ப்பது…

40

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாமல் தவிர்ப்பது தொடர்பாக, கவனம் செலுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனம், மதத்தின் அடிப்படையில் இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவது குறித்தும், கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *