முக்கிய செய்திகள்

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனை

210

மதுரையில் 4 இடங்களில் என்ஐபி எனப்படும், தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவானதன் எதிரொலியாக இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன.

மதுரையில் மஹபூப்பாளையம், பெத்தானியாபுரம், கே.புதூர் காஜிமார் தெரு ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அதிகாலை தொடங்கிய சோதனை சுமார் 3 மணி நேரம் நீடித்துள்ளது.

இதையடுத்து மடிகணினி, வன்தட்டு, சேமிப்பகம், அலைபேசி, சிம் அட்டைகள் உட்பட 16 பொருட்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்திய போதும், எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *