முக்கிய செய்திகள்

மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விநியோகம்

74

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசியை ஒன்ராரியோவில் விநியோகிக்கும் செயற்பாட்டில் மத்திய அரசாங்கத்தின் பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராரியோ மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் (Christine Elliott) தெரிவித்தார்.

ஏற்கனவே ஒன்ராரியோவில் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பில் சில குழப்பமான நிலைமைகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையல் இந்த தடுப்பூசியை மத்திய அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக விநியோகிக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள் எழுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இந்த தடுப்பூசியை குறிப்பிட்ட வயதெல்லை உடையவர்களுக்கு விநியோகிப்பது பற்றி மாகாண மட்டத்தில் ஆரம்பத்தில் ஆராயப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரையான அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி ஒன்ராரியோவுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *