முக்கிய செய்திகள்

மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

314

மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

பரிஸ் வெடி விபத்தில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு – 47 பேர் காயம்

மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தத்தில் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பரிஸ் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையே இந்த சம்பவத்திற்கான காரணம் என பரிஸ் பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில், அந்த நாட்டு நேரப்படி இன்று(சனிக்கிழமை) காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த, சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் சுமார் 47 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் இதுவரை பணியில் ஈடுபட்டிருந்த இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இரண்டு ஹெலிகொப்டர்களும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெடிப்பு சம்பவத்தையடுத்து தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *