முக்கிய செய்திகள்

மத்திய பிரதேச சட்டசபையில், மத சுதந்திர சட்டம் நிறைவேற்றல்

25

மத்திய பிரதேச சட்டசபையில், மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘காதல் ஜிகாத்’தை தடுக்க கடந்த ஜனவரி 9-ம் நாள் மத்திய பிரதேச அரசு, மதமாற்றத் தடை அவசர சட்டத்தை அமுல்படுத்தியது.

இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, மத சுதந்திர சட்டம் மாநில சட்டசபையில் கடந்த முதலாம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த விவாதம் மாநில சட்டசபையில் நேற்று நடைபெற்றபோது, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி  கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ ஒருவரை மதமாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையும்,  ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *