முக்கிய செய்திகள்

மத்திய புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் மரணம்

69

மத்திய புலனாய்வு துறையான, சிபிஐயின் முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனா தொற்றினால், இன்று காலை மரணமானார்.

இந்தோ-திபெத்தியன் படை, தொடருந்து பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் இருந்த ரஞ்சித் சின்ஹா, 2012-ம் ஆண்டு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ரஞ்சித் சின்ஹா, தனது பதவிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணை செய்திருந்தார்.

நேற்று இரவு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4:30 மணியளவில் காலமாகியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *