முக்கிய செய்திகள்

மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது; சீ.வீ.கே.சிவஞானம்

250

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது  என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில் ‘2010ஆம் ஆண்டு முதல் இனவெறி அரசாங்கங்களின் தடைகள் இடையூறுகள் எல்லாவற்றையும் மீறியும் நாம் எல்லோரும் பல்வேறு  வழிகளில் இந்நாளை  நினைவு கூர்ந்தே  வந்திருக்கிறோம்.   இதன் ஒரு அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் எளிமையான நினைவுத்தூபி நிறுவப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வுகளை  தடுத்து வந்த அரசாங்கம் இப்பொழுது அந்த நினைவு தூபியையும்  இரவோடு இரவாக இடித்தழித்துவிட்டு  அப்படி ஒரு தேவை இராணுவத்துக்கு இல்லை என்கிறது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து நின்றுகொண்டு நினைவுத்தூபி  அழித்தது பற்றி தமக்கு தெரியாது என்கின்றனர்.

கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம்.  ஆனால் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அழிக்க முடியாது . இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்த கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *