மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை

406

மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் அமர்வுக்கு சென்றுள்ள இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள ராகவன், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் எனவும் அவர் கூறினார்.
தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தான் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *