மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள The Beta இல் கார்பன் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

291

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து அகழப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள The Beta இல் கார்பன் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த மனித எச்ச மாதிரிகள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனையே முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில் தெரிவு செய்யப்பட்ட 6 மனித எச்ச மாதிரிகள், மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கார்பன் பரசோதனை முடிவுகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *