மனித எலும்புக்கூடுகள் தொடர்பான கார்பன் பரிசோதனை ஆய்வறிக்கை, எதிர்வரும் புதன்கிழமை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

293

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டு, ஆய்வுக்காக புளோரிடா ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான கார்பன் பரிசோதனை ஆய்வறிக்கை, கிடைத்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கை, எதிர்வரும் புதன்கிழமை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து, தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 145ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது, சந்தேகத்துக்கிடமான சிறுவருடைய மனித எலும்புக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. குறித்த எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்‌ஷதெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், 307க்கும் மேற்ப்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *