மனித நேயமிக்க மனிதர்

2153

‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்’ என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.,இன்று இவரது நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மறைந்தாலும் மக்கள் மனங்களில் வாழ்கிறார். சினிமா, அரசியல்
வரலாற்றில் சாதனைகள் பல படைத்த இவர், காலத்தை வென்ற தலைவர்.’மக்கள் திலகம்’ என புகழப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1917 ஜன.,17ல்
இலங்கையின் கண்டியில் பிறந்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். இவரது பெற்றோர் மருதுார் கோபால மேனன் – சத்தியபாமா.
தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவுக்குப் பின், தாய் மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்கரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த
அனுபவத்தின் மூலம் திரையில் கால் பதித்தார்.
அயராத உழைப்பு,
கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் உறுதி என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார்.
பிஞ்சு மனதில் நஞ்சை கலக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும்
ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.
சினிமாவில் வெற்றிக்கொடி

எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. 1936ல் வெளி வந்தது. 1947ல் ‘ராஜகுமாரி’ படம் புகழை ஈட்டித் தந்தது. 197௨ல் ‘ரிக் ஷாக்காரன்’ படத்திற்காக, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ பெற்றார்.
நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்தார். அவர் நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ திரைப்படம் மூலம் அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டினார்.

அரசியல் களம்
தி.மு.க.,வின் உறுப்பினராகவும், பொருளாளராகவும் பணியாற்றினார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின், அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட, தி.மு.க.,வில் இருந்து ௧௯௭௨ அக்.௧௦ல் நீக்கப்பட்டார்.
தமிழக முதல்வர்
1972 அக்., 17ல் அ.தி.மு.க.,வை தொடங்கினார். ௧௯௭௭ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., முதல்முறையாக முதல்வரானார். 1980ல் 2வது முறையாக முதல்வரானார். 1984 தேர்தலின்போது, நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. ஆனாலும் மக்களின் தலைவரான இவர் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வரானார். 1987 வரை (10 ஆண்டுகள்) முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பதவியில் இருக்கும் போதே, உடல்நலக்குறைவால் 1987 டிச.,24ல் மறைந்தார். துணிச்சலும், பாசமும்!
புகைப்படக்கலை நுணுக்கம் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்., என்பது அறிந்ததே. பெரும்பாலும் தலைவர்களுக்கு மாலையிடும் போது எடுக்கப்பட்ட படங்களில் ஒருவர் முகம் தெளிவாக தெரியும்.
இன்னொருவர் முகம் மாலை அல்லது போடுபவரின் கை இடையே வந்து மறைத்துவிடும். ஆனால் எம்.ஜி.ஆர். யாருக்காவது மாலை அணிவித்தாலோ, அல்லது அவருக்கு அணிவித்தாலோ இருவரது முகமும் மறைக்காமல் தெளிவாக தெரியும்படி பார்த்துக்
கொள்வார். யாராவது மாலை அணிவித்தால், போட்டோ எடுக்க வசதியாக கழுத்தில் மாலை இருந்தபடியே, போடுபவரது இரு கைகளையும் லாவகமாக இறுக்கி பிடித்துக்கொள்வார். அந்த நேரத்தில் இருவரது முகமும் நன்றாக தெரியும். எங்களை போன்ற போட்டோகிராபர்களுக்கு அருமையான படம் கிடைக்கும். இங்கு வெளியிட்டிருக்கும் மாயத்தேவர்
எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கும் படத்தை பார்த்தாலே நான் சொன்னது விளங்கிவிடும். துணிச்சல்எம்.ஜி.ஆரின் துணிச்சலுக்கு உதாரணமாக ஒரு சம்பவம். 1977 சட்டசபை தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதிக்கு, வேட்புமனு தாக்கல் செய்ய புறப்படும்முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். பெரிய மாலையை தொண்டர்கள்
துாக்கிக்கொண்டு வந்தனர். இப்போது இருப்பது போன்று சிலைக்கு அருகில் நிற்கும் வசதி இல்லை. காரை விட்டு இறங்கினார் எம்.ஜி.ஆர்., தொண்டர்களில் சிலர் எங்கேயோ சென்று வீடுகளில் உள்ள மர ஏணி ஒன்றை எடுத்து வந்தனர். ”தலைவா… நீங்கள் சிரமப்பட
வேண்டாம் கீழேயே இருந்து மாலையை தொட்டு கொடுங்கள். நாங்கள் ஏறி அணிவிக்கிறோம்” என்றனர். அவர் காதில் வாங்கவில்லை. சிலையையும், ஏணியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, சட்டென ஏறத்தொடங்கி
விட்டார். ‘மேலே நிற்க இடமில்லையே… என்ற திகைப்புடன் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏணியின் மீது ஏறி சிலை பீடத்தை அடைந்த எம்.ஜி.ஆர்., குறுகலான பீடத்தின் மீது நின்று, தன் இரு கைகளால் சிலையை தொட்டு கொண்டார். கொஞ்சம் நிலை தடுமாறினால் விழ நேரிடும். அதை பொருட்படுத்தாமல் சிலைக்கு பின்புறம் ஒருவர் மாலையை துாக்கிகொடுக்க, அதை லாவகமாக வாங்கி, சிலையின் கழுத்தில் விழும்படி அணிவித்தவுடன், அங்கு கூடியிருந்தோர் கைதட்டியது அந்த பகுதியையே அதிர வைத்தது. சினிமாவில் வீரதீர செயல்களுக்கு ‘டூப்’ போட்டு எடுப்பதாக அறிவோம். ஆனால் பலர் முன்னிலையில் தைரியமாக, பிடிப்பில்லாத ஒரு இடத்தில் வேட்டியுடன் மேலே ஏறி, பிரச்னையின்றி கீழே இறங்கி வந்தார். பாச உணர்வு
எம்.ஜி.ஆர்., அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பது போன்று பல போட்டோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் வித்தியாசமான சம்பவத்தை எந்த முதல்வரும் செய்யாததை நினைவு கூற்கிறேன். அமைச்சர்கள் ராஜ்பவனில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபின்,
கோட்டைக்கு வந்தனர். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைச்சர்களை, அவர்களது அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். மற்ற சீனியர் அமைச்சர்களை பின்னால் நிற்கச் செய்து, தானும் ஓரத்தில் நின்று குரூப் போட்டோ எடுக்கச் சொன்னார். இந்த செயல், சகோதரர்களிடம், மூத்த அண்ணன் காட்டும் பாச உணர்வை பிரதிபலித்தது. – எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், புகைப்பட நிபுணர் சத்துணவு திட்டம்ஏழை மாணவர்கள் பசியால் வாடுவதை போக்க ‘சத்துணவு திட்டத்தை’ 1982ல் கொண்டு வந்தார். இன்றும் ‘எம்.ஜி.ஆர்.,
சத்துணவு திட்டம்’ என்ற பெயரில் தொடர்கிறது.
தாய்க்குலத்தின் ‘தலைமகன்’
௧௯௬௭ல் எம்.ஜி.ஆர்., நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். இதனால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.க.,வுக்கு தாய்க்குலங்கள் பெருமளவில் வாக்களித்தனர்.
அ.தி.மு.க., தொடங்கிய பின் தாய்க்குலங்களின் ஆதரவு அ.தி.மு.க.,விற்கு முழுக்க முழுக்க மாறியது.
17 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு முறை பிலிம்பேர் விருது, தேசிய விருது, கவுரவ டாக்டர் பட்டம், அண்ணா விருது, வெள்ளி யானை போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்து வந்த பாதை1917 : ஜன.17ல் எம்.ஜி.ஆர்., பிறந்தார்.
1936 : தமிழ் சினிமாவில் அறிமுகம்.
1947 : முதல் படம் ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : தி.மு.க., வில் சேர்ந்தார்.
1954 : தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலர்.
1958, 61 : தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்.
1960 : ‘பாரத்’ விருதை ஏற்க மறுப்பு.
1962 : சட்டசபை மேலவை உறுப்பினர்.
1967 : எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார்.
1967 : முதல் முறை எம்.எல்.ஏ.,
1969 : தி.மு.க., பொருளாளராக பொறுப்பேற்பு.
1971 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,
1972 : அ.தி.மு.க., துவக்கம்.
1972 : ‘ரிக் ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருது.
1974 : சென்னை பல்கலை., மற்றும் அமெரிக்காவின் அரிசோனா உலக பல்கலை., கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
1977 : ஜன., 30ல் முதல் முறையாக தமிழக முதல்வர்.
1984 : அமெரிக்காவில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
1987 : டிசம்பர் 24ல் மறைவு.
1988 : பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
2017: ஜன.17ல் எம்.ஜி.ஆர்., நுாறாவது பிறந்த தினம். ‘ஹாட்ரிக்’
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்குப்பின் தொடர்ந்து மூன்று முறை முதல்வரானவர் எம்.ஜி.ஆர்., அதே போல கட்சி தொடங்கி நான்கரை ஆண்டில்
முதல்வரானவர். கொடை வள்ளல்
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்., மனிதநேயமிக்க இவர், மக்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் முதல் ஆளாக உதவுபவர். 1962ல் நடந்த இந்தியா – சீனா போருக்கு, 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.பாரத ரத்னா
சத்துணவு திட்டம், இலவச வேட்டி சேலை போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் 1988ல் மத்திய அரசின் உயரிய விருது ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.
நடிகர் டூ முதல்வர்இந்தியாவில் முதன்முதலாக நடிகராக இருந்து முதல்வரானவர்இவரே
தமிழுக்கு சிறப்பு
எம்.ஜி.ஆர்., தமிழ் மொழி வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார். 1981ல் மதுரையில் 5வது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார். அரசவைக் கவிஞராக கண்ணதாசனை நியமித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *