முக்கிய செய்திகள்

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலான வழக்கு நாளை வரை

663

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலான வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பிலான ஃபுளோரிடா பீற்றா அனாலிட்டிக்ஸ் ஆய்வுகூட கார்பன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாகக் கிடைக்காமையால் வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் இ.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பீற்றா அனெலிக்ரிக்ஸ் நிறுவனத்தின் மாதிரி அறிக்கை கடந்த 15 ஆம் நாள் அதன் இணைத்தில் இருந்து பெறப்பட்டிருந்தது.
எனினும் குறித்த முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய மன்னார் நீதிமன்றம் அதனை பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்து பேரூந்துக்களில் ஏற்றிச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டு மன்னாரில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியாகியுள்ளது.
பீற்றா அனெலிட்டிக்ஸ் காபன் ஆய்வுப் பரிசோதனை அறிக்கை வெளியிடலில் காணப்படும் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இச்சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டு 300க்கும் அதிகமான எலும்புக்கூடுகளில் சிறார்களது எலும்புக் கூடுகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *