முக்கிய செய்திகள்

மன்னார் மனித புதை குழியில் இருந்து அருகருகே தாய் மற்றும் சேயின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

502

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

மனித புதைகுழி அகழ்வின் போது சந்தோகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து, குறித்த இரு மனித எச்சங்களை சுழ்ந்திருந்த களிமண்களை அகற்றிய சந்தர்பத்தில், அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என்று சந்தோகிக்கபடுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இரண்டு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களையும் தங்களால் கூற முடியாது எனவும், முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் இந்த அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதி மன்றத்திற்கு தாங்கள் முன் வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *