முக்கிய செய்திகள்

மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு,சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

290

மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம், சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் குமி நாய்டோ (முரஅi யேனைழழ ), பகிரங்க மடல் ஒன்றின் மூலம் அரச தலைவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாகவும் அது ஏற்புடைய தீர்மானம் கிடையாது எனவும் நாய்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை எதிர்க்கும் வகையில் இணைய வழி மகஜர் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிரானதும் கொடியதுமான மரண தண்டனை நிறைவேற்றம் கடந்த நாற்பது ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மிகச் சொற்ப நாடுகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், மரண தணடனை அமுலாக்கத்திற்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை அரச தலைவர் மரண தண்டனையை நிறைவேற்றும் தனது தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *