முக்கிய செய்திகள்

மராட்டிய முதல்வர் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம்

53

கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தின் மூலம் பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில பேரழிவு நிதியில் இருந்து செலவு செய்ய முடியும் என உத்தவ் தாக்கரே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கொரோனாவை இயற்கை பேரழிவாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *