மராட்டி மாநிலத்தில் தொடரும் கனமழையின் விளைவாக இதுவரையில் 7பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

412

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழை மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய உள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.

மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பல இடங்களில் வீடுகள், வீதிகள், வாகனங்கள் என்பன வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அவற்றில் சிக்கித் தவித்தவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தொடரூந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் சிக்கித்தவித்த வெளியூர் பயணிகள் 2,000 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

தரைவழிப் போக்குரத்துச் சேவைகள் மாத்திரமன்றி, வானூர்திப் போக்குவரத்திலும் தாமதங்கள் ஏற்பட்டதனால் வானூர்த்திச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

இதேவேளை மராட்டி மாநிலத்தில் தொடரும் இந்த கனமழையின் விளைவாக இதுவரையில் 7பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *