மருத்துவர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு

51

கிழக்கு ஒன்ராறியோவில் மருத்துவமனையில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பாக, அங்கு பணியாற்றிய மருத்துவர் ஒருவர், மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Hawkesbury  மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில்  உள்ளக மருத்துவ சிறப்பு நிபுணரான, 35 வயதுடைய பிரையன் நட்லர்  (Brian Nadler) என்ற மருத்துவரே கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவாவிற்கும் மொன்ட்றியலுக்கும் (Montreal) இடையில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் இடம்பெற்ற எத்தனை மரணங்கள் குறித்து விசாரணை நடத்துகின்றனர் என்ற தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை.

கைது செய்யப்பட்டுள்ள மருத்துவரின் சட்டத்தரணி, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *