முக்கிய செய்திகள்

மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் மட்டக்களப்பில் மீட்பு

138

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறை புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து ஜெலட்டின் 729 குச்சுகளும், அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள், வெடி பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள்,31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *