முக்கிய செய்திகள்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம்

37

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆயரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்து வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் சிறிலங்காவில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படது.

இதன்போது கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை மன்னார் நகர பகுதியில் ஆயரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை இன்று மாலை திறந்து வைத்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *