யாழ்ப்பாணத்தில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு சுகாதார தொண்டர், மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரி, சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதார தொண்டர்களில் மூவர் நேற்று மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று காலை மேலும் ஒருவர் மயக்கமடைந்ததை அடுத்து, நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் தமது போராட்டத்தை சிறிலங்கா அரசாங்கமோ, அதிகாரிகளோ திரும்பியும் பார்க்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.