முக்கிய செய்திகள்

மலையக மக்ககளின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரால் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது

1283

மலையக மக்ககளின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று கவஈர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

rally-jaffna-2

இன்று வெள்ளிக்கிழமை யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்,

மலையக தோட்டத் தொழிலாளர்கள் கோரும் 1000ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன.

rally-jaffna-3rally-jaffna3

மலையகத்தில் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பள அதிகரிப்பை கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வடக்குகிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *