முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கும் இணைய வழிக் கல்வி – திருமலையில் ஆர்ப்பாட்டம்

164

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழிக் கல்வியை இலவசமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நட்டத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை ஜேவிபியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜேவிபியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில், இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மாணவர்களின் கல்விக்காக இலத்திரனியல் ஊடகங்களில் வழங்கப்படும் சந்தர்ப்பங்களை அதிகரிக்க வேண்டும் என்றும்,  அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழிக்கல்வியினை இலவசமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும்,, பிள்ளைகளின் கல்வி முடக்கத்துக்கு உடனே தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும், பதாதைகளையும், ஏந்தியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *