மாநகரசபைகளின் பொறுப்புக்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

260

மாநகரசபைகளின் பொறுப்புக்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ரொறன்டோவில் நடைபெற்ற கிராமிய மாநகரசபை ஒன்றியத்தின் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது முதல்வர் போர்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு தரப்பு ஏதேனும் ஓர் விடயத்திற்கு பகுதியளவிலேனும் பொறுப்பாக இருந்தால் அந்த விடயத்தினால் ஏற்படக்கூடிய நட்டங்களுக்கான பொறுப்பினையம் அதே தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மாநகரசபைகள் சில சந்தர்ப்பங்களில் சொத்துக்களுக்கான காப்புறுதி கட்டணங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இது வரிச் செலுத்துவோரிடமிருந்தே அறவீடு செய்யப்படவதாகவும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களின் போது நட்டஈடு வழங்கும் பொது நகரசபைகளும் அதில் ஒர் பொறுப்புதாரிகள் என்ற அடிப்படையில் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *