முக்கிய செய்திகள்

மாபெரும் வாகனப்பேரணி முன்னெடுப்பு

225

சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான  போராட்டடத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கனடாவின் மாபெரும்  வாகனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில்  இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான மாபெரும் கண்டன வாகனப் பேரணி யில் பல்லாயிரக்கனக்கானவர்கள் பங்கேற்றிருந்தார்கள்.

இந்தப்பேரணியானது ஹியூவொண்டாரியோ, Haskell Ave மற்றும் Harwood Ave, டொரோண்டோ Markham Rd & Steeles Ave E சந்திப்பு மிஸ்ஸிசாக ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து ஆரம்பித்து, யங் வீதி மற்றும் Sheppard Ave E சந்திப்பில் ஒன்றிணைந்து குயின்ஸ் பார்க் நோக்கி சென்று ஒன்ராரியோ நாடா ளுமன்றை சுற்றி வந்திருந்தது.

இந்தப் பேரணியில், தமிழினப் படுகொலை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை, தமிழீழம் ஆகிய ஹாஸ்டாக் வாசகங்கள் காணப்பட்டடிருந்தன.

அத்துடன் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக இப்பேரணி முன்னெடுக்கப்பட்டு மாலை 6.30 வரையில் நீடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *