முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என, சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே, பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்னெடுக்கப் போவதில்லை என்று, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.