மார்க்கம் பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்கம் வீதியில், 14th Avenueவிற்கும் Princess Streetற்கும் இடைப்ப்டட பகுதியில் அமைந்துள்ள Vinegar Hill குடியிருப்பு பகுதியில், இன்று பிற்பகல் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை யொர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் காணப்ப்டடதாகவும், அவர் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய மற்றைய வாகனத்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறியும் நோக்கில், பாரிய விபத்துகள் தொடர்பிலான சிறப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.