முக்கிய செய்திகள்

மார்க் சாண்டர்ஸ் ஒன்ராரியோவின் புதிப்பித்தல் திட்டங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்

41

ரொறண்டோ காவல்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியான மார்க் சாண்டர்ஸ் (Mark Saunders) ஒன்ராரியோவின்  புதிப்பித்தல் திட்டங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஒன்ராரியோவின் விளையாட்டு, பாரம்பரியம், கலாசார அமைச்சர் லிசா மேக்லியோட் (Lisa MacLeod) மற்றும் மாகாண முதலமைச்சர் டக் போர்ட் (Doug Ford) ஆகியோருக்கு ஆலோசனைகளை வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் ரொறண்டோவின் பழங்குடிகள் சமூகத்தின் மேம்பாடு,  தொடர்பிலும் அவர் விசேட கவனம் செலுத்தவுள்ளதோடு மேம்படுத்தப்பட்ட உதவிகளுக்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *