முக்கிய செய்திகள்

மிகப்பலமான தீர்மானமாக தற்போதைய தீர்மானம் உள்ளது

44

2009இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.தீர்மானத்திற்கு பின்னர் மிகப்பலமான தீர்மானமாக தற்போதைய தீர்மானம் உள்ளது என்று ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்

ஜெனிவாவில் 22 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டும், 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை அடைவதற்கான முக்கியமான ஒரு முன்னேற்றப்படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்மானம் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு சிறிலங்கா தவறியுள்ளதை காட்டுவதோடு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பில் மேலதிகமாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்றை உருவாக்குவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தத் தீர்மானம், மேலதிக பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்கான மூலோபாயங்களை முன்வைக்குமாறும், பேரவைக்குக் கிரமமாக அறிக்கையிடுமாறும் உயர்ஸ்தானிகருக்கு ஆணையிடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை 2009 ஆம் ஆண்டு இந்த விடயத்தை எடுத்துக்கொண்ட பின்னர் நிறைவேற்றப்பட்ட மிகப் பலமான தீர்மானமாக இது அமைகிறது. மேலும் சிறிலங்கா குறித்த மையக் குழுவின் நாடுகளின் கடின உழைப்பையும், அவர்கள் வழங்கிய தலைமைத்துவத்தையும் சுட்டிக் காட்டிய அவர்,

இந்தத் தீர்மானத்தைப் பலப்படுத்தி நிறைவேற்றுவதற்கு ஜெனிவாவிலும், கொழும்பிலும் உள்ள கனேடிய தூதரகங்களும், கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னோவும் (Marc Garneau), நாடாளுமன்ற செயலாளர் றொப் ஒலிஃபண்டும் (Rob Oliphant), மையக் குழுவுடன் இணைந்து கவனத்துடன் பணியாற்றினார்கள். அவர்களது முயற்சிகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *