மிசிசாகாவில் இன்று பட்டப்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

948

மிசிசாகாவில் இன்று பட்டப்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Hurontario Street மற்றும் நெடுஞ்சாலை 403 பகுதியில், Acorn Placeஇல் உள்ள வீடு ஒன்றின் வெளியே, இன்று பிற்பகல் 12.15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கே ஆண் ஒருவர் பலத்த துப்பர்ககிச் சூட்டுக் காயங்களுடன் காணப்ப்டடதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் காணப்படடவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர் எனவும், அவரது உடலில் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலாளிகள் என்ற சந்தேகிக்கப்படுவோர் சம்பவ இடத்திலிருந்து சாம்பல் நிற வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *