முக்கிய செய்திகள்

மிசிசாகா பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர நடவடிக்கை அறிவிப்பினை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

1202

நேற்று பிற்பகல் மிசிசாகா பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர நடவடிக்கை அறிவிப்பினை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

St. Barbara Boulevard மற்றும் Comiskey Crescent பகுதியில், நேற்று பிற்பகல் 1.25 அளவில், இரண்டு ஆண்கள் சிறுமி ஒருவரை சாம்பல் நிற சிற்றூர்தி ஒன்றில் பலவந்தமாக ஏற்றிக் சென்றதனை சிலர் கண்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனம் இறுதியாக St. Barbara Boulevardஇலிருந்து Derry Road West பகுதி நோக்கிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 15 வயது சிறுமியான அலீசா லங்கீல்(Alyssa Langille) என்பவர் காணாமல் போயுள்ளதான முறைப்பாட்டினை அவரது குடும்பத்தினர் இரவு ஒன்பது மணியளவில் காவல்த்துறையில் பதிவு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்தே பிற்பகல் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியும், காணாமல் போதாக இரவு முறையிடப்பட்ட சிறுமியும் ஒருவரே என்பதனை அறிந்துகொண்ட அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படு்ததியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேக நபர் சுமார் 24 வயது மதிக்கத்தக்க தென்ஆசிய ஆண் எனவும், சம்பவத்தின் போது அவர் செம்மஞ்சள் நிற தலைப்பாகையும், சாம்பல் நிற குளிர் அங்கியும் அணிந்திருந்ததாகவும், இரண்டாவது சந்தேக நபரும் தென்னாசிய ஆண் எனவும், கறுப்பு நிற தலைமுடியுடன் அவர் காணப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலையில் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், குறித்த இந்த பெண் இதற்கு முன்னரும் காணாமல் போயுள்ள போதிலும், இவ்வாறு கடத்திச் செல்லப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் அல்லது நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *