மியன்மாரின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கி கவலை

34

மியான்மரின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவம் அதிகாரத்தை கையகப்படுத்துவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த நிகழ்வுகள் நாட்டின் மாற்றம் மற்றும் அதன் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

எங்கள் ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்கள் உட்பட மியான்மரில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

மேலும் மியான்மருக்குள்ளும் வெளி உலகத்துடனும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் கலக்கமடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளாக மியான்மரின் ஜனநாயகத்திற்கான மாற்றத்தை ஆதரிப்பதில் ஒரு உறுதியான பங்காளியாக இருந்ததாகவும், பரந்த அடிப்படையிலான நிலையான வளர்ச்சியை அடைவதற்கான அதன் முயற்சிகள் மற்றும் சமூக சேர்க்கை அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *