மியன்மாரில் இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவர்கள் ஆரம்பித்த ஒத்துழையாமைப் போராட்டத்தை அடுத்து, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டங்களை தொடங்கியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோன் ( yangon) வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
அத்துடன், ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக முழக்கங்களை வெளியிட்ட அவர்கள், பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.