முக்கிய செய்திகள்

மியன்மார் விவகாரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத்தில் தீர்மானம்

37

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி (Aung San Suu Kyi ) உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து, ஆராயும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் துணை ஆணையாளர், ‘மியன்மாரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான உழைப்பின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தை அண்மையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சீரழித்து விட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடா்ந்து, மியான்மா் அரசின் தலைமை ஆலோசகா் ஆன் சாங் சூகி (Aung San Suu Kyi ) , ஜனாதிபதி வின் மின்ட் (Win Myint) மற்றும் ஏனைய அரசியல் தலைவா்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தும், தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *