மியான்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆங் சான் சூகி மற்றும் மியான்மாரின் அரசாங்க தலைவர்களைக் கைது செய்துள்ள இராணுவம், அங்கு ஒரு ஆண்டுகால அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.
மியான்மார் இராணுவம் அரசாங்கத் தலைவர்களை விடுதலை செய்து, நாட்டில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் மியான்மாரில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் கூடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பணிகளைத் தொடர இடமளிக்கப்ப வேண்டும் என்றும், ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.