மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மியன்மர் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
இதைடுத்து, அனைத்து தலைவர்களையும் விடுதலை செய்யக் கோரி, மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மூன்றாவது நாளாக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கூட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதிவழிப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், யங்கூன் ( yangon), மண்டாலே (Mandalay) நகரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் இராணுவம் தடை விதித்துள்ளது.