சமஷ்டி அரசாங்கம் அறிவித்துள்ள விடுதிகளில் மூன்று நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறையானது விடுதி தொழிற்துறையினருக்கு போதிய ஊக்கத்தினை அளிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் கட்டாயத்தின் பேரில் தங்கியிருக்க தலைப்பட்டவர்கள் சதாரண தருணங்களில் மீண்டும் விடுதிகளை நாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இவ்வாறு விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட விடயங்களிலும் போதியளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
ஒருவிதமான அச்சமான மனநிலை உடனேயே விருந்தாளிகளை அணுகவேண்டியுள்ளதாக விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.