இந்திய மீனவர்களின் மரணத்துக்கு காரணமான சிறிலங்கா கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நெடுந்தீவுக்கு அப்பால் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று, சிறிலங்கா கடற்படைப் படகினால் மோதப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டதில் நான்கு மீனவர்கள் உயிரிழந்தனர்.
மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பொறுப்பான சிறிலங்கா கடற்படை அதிகாரிகளை கைது செய்யக் கோரியே, வழக்கறிஞர் ஜெய் சுகின் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாவை சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.