தமிழகத்தில், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து வாக்காளர்களையும், தேர்தல் அதிகாரிகளையும் பாதுகாப்பது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யப்பட அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தேர்தல் ஆணையகம் மூலமாக வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்புக் கவச உடையை அணிந்து வந்து வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.