முகநூல் நிறுவனம் கனேடிய அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக பிரித்தானிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் தகவல் மையமொன்றை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக முகநூல் நிறுவனம், கனேடிய அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பிரதி உபகாரமாக தகவல் சட்டங்களில் சில சலுகைகளை வழங்குமாறு முகநூல் நிறுவனம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கொன்சர்வேட்டிவ் அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Previous Postசெல்வன் அபிவர்மன் அருள்பிரரங்கா
Next Postவடக்குக் கிழக்கில் எதிர்வரும் 19 ஆந் நாள் முழுமையான கதவடைப்புப் போராட்டம்!