முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம்

241

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சட்டப்பேரவை செயலாளர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதன்பின்னர் சட்டசபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்த தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி, தேர்தலில் அமோக வெற்றி பெற்றமைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களும் அகர வரிசையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *