முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால், அதற்கு ஆதரவளிக்க டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக உள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்

454

வடமாகாணசபை தேர்தலில முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்து போட்டியிட முற்பட்டால், அதற்கு ஆதரவளிக்க டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக உள்ளதாக அக்கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும் வடமாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர், அடுத்த தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலிலேயே தற்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போட்டியிட வேண்டுமென்பதே டெலோவின் நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போதுள்ள சூழலில் அது சாத்தியப்படுமென தெரியவில்லை என்றும், இந்த நிலையில் முதலமைச்சர் புதிய கட்சியிலோ அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தோ தேர்தல் களத்தில் குதித்தால், டெலோ அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமெக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரது பாதை சரியாக இருப்பதால் தான் தாங்கள் அத்தகைய முடிவை எடுக்கவேண்டியிருக்கின்றது என்றும் விந்தன் கனகரட்ணம் கூறியுள்ளார்

2001 முதல் 2015 வரையில் வடக்கில் 50 இற்கும் அதிகமான விழுக்காடு வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு, கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 35 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்கையே பெறமுடிந்தது எனவும், இது தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையினை இழந்தமையே காரணமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *