முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைப் பதிவு செய்துள்ளார்

746

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் நேற்று இந்த வழக்கைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை முதலமைச்சர் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இந்த மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நாளையநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை வடமாகாண அமைச்சர் பொறுப்பில் இருந்து டெனீஸ்வரனை நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் சமர்ப்பிப்பு நாளை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டளைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு நாளை நிறைவடைகிற அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் பதிவு செய்த மனு, செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *