முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அல்போன்சோ மறைவு

28

லிபரல் கட்சியின் பொதுமக்கள் செயற்பாட்டு முன்னாள் அமைச்சர் அல்போன்சோ காக்லியானோ (Alfonso Gagliano) தனது 78ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவரது மகள் இம்மா காக்லியானோ ( Imma Gagliano) அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற அரசியலுக்குள் பிரவேசித்த அவர், 18ஆண்டுகள் அதில் நீடித்திருந்தார்.

மேலும் அவருடைய அரசியல் வாழ்க்கையில் 200ஆம் ஆண்டு  குடியேற்ற அனுசரணைகளின் போது மேற்கொண்ட ஊழல்கள் வெளிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து அவருடைய அரசியல் வாழ்க்கை நிறைவுக்கு வந்திருந்ததோடு இறுதிவரையில் நீங்காத கறுப்பு புள்ளியாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *