முக்கிய செய்திகள்

முன்னாள் இராஜதந்திரி தயான் விடுத்துள்ள எச்சரிக்கை

158

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கம், இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை விட, ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள்,  சமத்துவம், நீதித்துறை சுயாதீனம் போன்ற விடயங்களில் கூடுதல் கரிசனையை கொண்டிருக்கும் என்று, முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

“ கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமத்துவம், நீதித்துறை சுயாதீனம் உள்ளிட்ட விடயங்களில், விமர்சனங்களுக்குரிய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு முற்றிலும் எதிரான போக்குடையதாகவே பைடனின் நிர்வாகம் இருக்கப் போகிறது.

சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் ட்ரம்ப் வாதிகளாகவே இருப்பதுடன், அவரது செயற்பாடுகளை ஒத்த சில நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றிருக்கின்றன.

முழுமையான அதிகாரம் தமது கைகளில் உள்ளது என்ற அடிப்படையிலேயே  சர்வதேச ரீதியிலும்  உள்நாட்டிலும்  பிரதிபலிப்புக்களைச் செய்கின்றனர்.

ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ், இராஜாங்க செயலராக நியமிக்கப்படவுள்ள அன்ரனி பிளிங்டன், பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லொயிட் ஒஸ்ரின் உள்ளிட்டவர்கள் ஜனநாயகம் தொடர்பில் அதீத கரிசனை உடையவர்கள்.

அவர்கள் ஜனநாயகம், மனித உரிமை விடயங்களை வலுவிழக்கச் செய்வதற்கும் இடமளிக்கமாட்டார்கள்.

எனவே அமெரிக்கா ஜனநாயகம், மனித உரிமைகள் விடயங்களில் இறுக்கமான நிலைப்பாடுகளை  எடுக்கலாம் ” என்றும் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *