முன்னாள் பேராளிகள் இரண்டு பேருக்கு வட மத்திய மாகாண நீதிமன்றம் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

258

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 இராணுவத்தினரை, வில்பத்து வனப்பகுதில் துப்பாக்கிப்பிரயோகம் செய்து படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பேராளிகள் இரண்டு பேருக்கு வடத்திய மத்திய மாகாண நீதிமன்றம் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் எனப்படும் உதயன் அல்லது ஐயன் மற்றும் சிவப்பிரகாசன் சிவசீலன் எனப்படும் இளையன் ஆகிய இரண்டு முன்னாள் பேராளிகளுக்கேஇவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக சட்ட மா அதிபரினால் அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், ஒரு குற்றத்திற்கு ஐந்து வருடங்கள் என்ற அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும் 5 வருடங்களில் கழிந்து செல்லும் வகையில் 25 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வில்பத்து தேசிய வனப்பகுதியில் வைத்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *