முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

133

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமது ஆளுகையின் கீழ் உள்ள 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் நிரம்பி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

24 அடி கொள்ளளவு கொண்ட முத்தையன்கட்டு நிரம்பியுள்ள நிலையில் இன்று மதியம்  வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், பண்டாரவன்னி, பேராறு? கனகரத்தினபுரம், வசந்தபுரம், கெருடமடு, கற்சிலைமடு, மூன்றாம் கண்டம். மன்னாகண்டல், மூன்றாம் கண்டம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தயார்படுத்தி கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *