முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பாக, எந்த விசாரணைகளும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதுடன், அங்கு கொண்டு வரப்பட்ட பாரிய நினைவுக்கல்லும், அகற்றப்பட்டது.
இந்தச் சம்பவங்களுக்கு, சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினருமே பொறுப்பேற்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனினும், இந்த விடயத்தில் இராணுவத்தினர் தொடர்புபடவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்துக்கு தொடர்புகள் இல்லை என்பதால், இதுகுறித்த விசாரணைகள் எதும் தேவைப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.